யாழ். மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பு தொடர்பில் அரசாங்க அதிபரின் அறிவிப்பு
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான பெற்றோல் கையிருப்பில் உள்ளதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை எனவும், செயற்கைத் தட்டுபாட்டை தவிர்க்கும்மாறும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
மேலும் காங்கேசன்துறையிலுள்ள பெற்றோல் களஞ்சியமானது வழமைபோல் ஞாயிற்றுக்கிழமை மூடப்படுவதால் சகல எரிபொருள் நிலையங்களுக்கும் நாளை மறுதினம் திங்கட்கிழமையிலிருந்து பெற்றோல் விநியோகிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
பெற்றோல் கையிருப்பு
மேலும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தலைவர் திரு. டி. ஜே. ஏ. எஸ். டி. எஸ். ராஜபக்சர்களுடன் தொலைபேசி மூலம் தாம் தொடர்புகொண்ட போது, நாட்டுக்குத் தேவையான ஒரு மாதத்திற்கான பெற்றோல் கையிருப்பில் இருப்பதாக தம்மிடம் தெரிவித்துள்ளார் என்பதனை அரசாங்க அதிபர் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ஈரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலைமையினையடுத்து யாழ்ப்பாணம் மற்றும் பல இடங்களில் மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 14 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam