வடக்கின் திட்டமிட்ட அபிவிருத்திகளில் யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பங்களிப்பு குறித்து கலந்துரையாடல்
வடக்கு மாகாண நிர்வாகம் மற்றும் மாகாணத்தின் திட்டமிட்ட அபிவிருத்திச் செயற்பாடுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் பங்களிப்பை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பது தொடர்பான ஆரம்பக் கட்டக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் தலைமையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று (05.05.2026) செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
இதன்போது, கலைப்பீடாதிபதி பேராசிரியர் நா.பிரதீபராஜா தனது தொடக்கவுரையில், வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்குவதற்கு யாழ். பல்கலைக்கழகக் கலைப்பீடம் தயாராகவே இருப்பதாகக் குறிப்பிட்டார்.
பங்களிப்பு அவசியம்
இதனைத் தொடர்ந்து உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர், வடக்கு மாகாணத்தில் திட்டமிடப்பட்ட மற்றும் கட்டமைக்கப்பட்ட அபிவிருத்திக்குப் பல்கலைக்கழகங்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும்.

வவுனியாப் பல்கலைக்கழகத்துடன் மாகாண நிர்வாகம் ஏற்கனவே பல்வேறு வழிகளில் இணைந்து செயலாற்றி வருகின்றது.
அதேபோல, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடம், பொறியியல் பீடம் மற்றும் தொழில்நுட்பப் பீடம் ஆகியனவற்றுடன் இவ்வாறான சந்திப்புக்கள் ஏற்கனவே நடைபெற்று, அவர்களின் சிறப்பான பங்களிப்புக்களும் மாகாண நிர்வாகத்துக்குக் கிடைத்து வருகின்றன.
தற்போது கலைப்பீடத்தினதும் பங்களிப்பைப் பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே இந்தக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.







விபத்து ஏற்பட்டு ரத்த காயத்துடன் வலியில் துடிக்கும் தமிழ், பதறிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam
மகா சங்கமத்தில் ஷாக்கிங் விஷயத்தை பாண்டியனிடம் கூறிய சுரேஷ்... பாண்டியன் ஸ்டோர்ஸ், அழகே அழகு சீரியல் Cineulagam