யாழில் மேலும் 25 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
யாழ்ப்பாணத்தில் மேலும் 25 பேருக்குக் கோவிட் வைரஸ் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடத்தில் 145 பேரின் மாதிரிகள் இன்று பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதில் 25 பேருக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சந்தை வர்த்தகர்கள், பணியாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என 21 பேருக்குக் கோவிட் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
வேலணை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் இருவருக்குக் கோவிட் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரும் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள்.
கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்குக் கோவிட் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விடுதியில் சிகிச்சை பெற்ற நோயாளி
ஒருவருக்கும் கோவிட் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan