நீதிபதி பதவி விலகல் விவகாரம்! யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் எடுத்துள்ள தீர்மானம்
முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக,யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தொடர்சியாக இரு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளது.
யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்றுக்குழு இன்றைய தினம் ஒன்றுகூடி முக்கிய பல தீர்மானங்களை எடுத்துள்ளனர்.
எதிர்ப்பு நடவடிக்கைகள்
இதன்போதே முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தொடர்பிலும், நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்தி சட்டவாட்சியை நிலைநாட்டவும் ஏதுவாக எதிர்வரும் இரு வாரங்களுக்கு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது என தீர்மானித்துள்ளனர்.
முக்கிய தீர்மானங்கள்
சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று குழுவில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு, முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கத்தால் எடுக்கப்பட்ட பணிப்பகிஸ்கரிப்பில் நாளைய தினம் இணைவதுடன் யாழ்.சட்டத்தரணிகள் சங்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் முல்லைத்தீவு சென்று நீதிமன்றத்தின் முன்னால் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வது.
நீதிதுறைக்கு ஏற்பட்ட இந்த அச்சுறுத்தலை கண்டித்து அடுத்து வரும் இரண்டு வாரங்கள் கறுப்பு நிறத்திலான முக்க்கவசங்களை அணிந்து கடமையில் ஈடுபடுவது.
தமிழ் கட்சிகளினால் மருதனார்மடம் முதல் யாழ்ப்பாணம் வரை குறித்த நீதிபதிக்கு எதிரான அச்சுறுத்தல்களைக் கண்டித்து 4ஆம் திகதி நடத்த இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்திற்கு ஆதரவை தருவதுடன் அதில் அனைத்து சட்டத்தரணிகளும் பங்கு கொள்வது.
நாளையும் நாளை மறுதினமும் சட்டத்தரணிகள் வடமாகாண நீதிமன்ற நடவடிக்கைகளை பகிஷ்கரிப்பதுடன் இது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய மேலதிக நடவடிக்கை தொடர்பான விசேட பொதுக்கூட்டத்தினை எதிர்வரும் 4ஆம் திகதி நடாத்துதல்.
நீதிபதிக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் பாரபட்சமற்ற சுயாதீன விசாரணை செய்யப்பட வேண்டும்.
எச்சந்தர்ப்பத்திலும் நீதித்துறை சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். போன்ற முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளனர்
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan