அமைச்சர் டக்ளஸ் தலைமையில் ஆரம்பமான யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்
யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி குழு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும், மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (28.03.224) வடக்கின் ஆளுநரும் மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான பி.எஸ.எம்.சார்ள்ஸின் பிரசன்னத்துடன் நடைபெற்றுள்ளது.
தீர்வுகள்
யாழ். மாவட்ட பதில் அரச அதிபர் பிரதீபனின் ஒழுங்குபடுத்தலில் ஆரம்பமான அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், நடப்பு ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் மாவட்டத்துக்கு ஒதுக்கப்படும் நிதி அதனூடாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.
மேலும், துறை ரீதியான முன்னேற்ற மீளாய்வில் சேவைத்துறை சார்ந்த முன்னேற்றங்கள், அவற்றின் தீர்வுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்படவுள்ளன.
இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு துறைசார் அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக பதவி நிலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |










யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

இன்று நள்ளிரவு முதல் போர்நிறுத்தம் அமுல்! நிபந்தனையின்றி ஒப்புக்கொண்ட தாய்லாந்து, கம்போடியா News Lankasri
