யாழ். மாநகர சபையில் ஆனோல்ட் சமர்ப்பித்த பாதீடும் தோல்வி
யாழ். மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 8 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
யாழ். மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அதன் தற்போதைய முதல்வர் இ. ஆர்னோல்ட்டினால் இன்று (13.02.2023) முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இன்றைய வாக்களிப்பில் 40 உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வரவு செலவுத் திட்ட வாக்களிப்பு
இதன்போது ரெலோ கட்சியின் சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதி முதல்வர் து. ஈசன், புளொட்டைச் சேர்ந்த பி. தர்சானந், சு. சுபாதீஸ் ஆகிய இரண்டு உறுப்பினர்களும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் எஸ். சாந்தரூபன் ஆகியோர் கூட்டத்துக்குச் சமூகமளிக்கவில்லை.
வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக 24 வாக்குகளும், ஆதரவாக 16 வாக்குகளும்
அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பாடகி எல்.ஆர்.ஈஸ்வரியா இது, சமூக வலைதளங்களில் வலம்வரும் லேட்டஸ்ட் போட்டோ... எப்படி ஆகிட்டார் பாருங்க Cineulagam
பிரித்தானியாவில் 2 கோடி குடும்பங்களுக்கு £100 ஆற்றல் மானியம்: சான்சலர் ஜான் ஹீலி அறிவிப்பு News Lankasri
வழி மாற்றிவிடப்பட்ட விமானம்., லண்டனில் சிக்கித் தவித்த இந்திய பெண் - ரூ.1.6 லட்சம் இழப்பீடு News Lankasri