யாழ். அளவெட்டியில் எரி காயங்களுடன் முதியவரின் சடலம் மீட்பு
தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி தெற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து முழுமையாக எரிந்த நிலையில் முதியவர் ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலமானது நேற்று(25.04.2024) மாலை மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது அதே பகுதியை சேர்ந்த ஐயம்பிள்ளை தேவராசா (வயது 73) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனை
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் தனது மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது மகள் வெளியே சென்றிருந்த போது, முதியவர் பீடி புகைப்பதற்கு முயன்றவேளை படுக்கையில் தீப்பற்றி, தீ விபத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளதோடு, உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |