யாழில் இடம்பெற்ற கோர விபத்து: இளைஞர் ஒருவர் பலி(Photos)
யாழ்.தாவடி பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் கயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி மூன்று மோட்டார் சைக்கிள்கள் மிகை வேகத்தில் பயணித்துள்ளன.
அதில் இரண்டாவதாக வந்த மோட்டார் சைக்கிள் யாழ்ப்பாணத்திலிருத்து மருதனார்மடம் நோக்கி பயணித்த கயஸ் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஒருவர் கவலைக்கிடம்
சம்பவத்தில் யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த அனுஜன் (வயது 19) என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இதேவேளை ஜெயசீலன் ரகுசான் (வயது 17) என்ற இளைஞர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
படுகாயமடைந்த இளைஞருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.





