யாழில் திருடர்களின் விநோத செயல் - நையப்புடை செய்த மக்கள்
யாழ்ப்பாணத்தில் திருடர்களின் செயற்பாடு பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட்டுக்கோட்டை , மூளாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் திருடுவதற்கு சென்ற திருடர்கள் அங்கு சமைத்து சாப்பிட்டு ஓய்வெடுத்துள்ளனர்.
திருடர்களின் செயல்
திருடச் சென்ற திருடர்கள், அங்கு யாரும் இல்லாத நிலையில், சமைத்து சாப்பிட்டு, மது அருந்திவிட்டு போதையில் தூங்கிவிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை வீட்டின் உரிமையாளர் வந்து பார்த்தவேளை திருடர்கள் இருப்பதை அவதானித்துவிட்டு அயலவர்களை அழைத்துள்ளார்.
நையப்புடை செய்த மக்கள்
இதன்போது ஒருவர் தப்பித்து சென்ற நிலையில் இன்னொருவர் மக்களின் கைகளில் அகப்பட்டு நையப்புடைக்கப்பட்டார். பின்னர் அவர் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
பொலிஸ் காவலில் இருப்பவர் மூளாய் - வேரம் பகுதியைச் சேர்ந்தவர். தப்பித்து சென்றவர் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்தவர்.
தப்பித்து சென்றவருக்கு வட்டுக்கோட்டை மற்றும் சுன்னாகம் பொலிஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளதாகவும் திறந்த பிடியாணை ஒன்று உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 1 மணி நேரம் முன்
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri