விடுதலைப்புலிகள் அமைப்பினரை குற்றஞ்சாட்டும் இந்திய புலனாய்வினர்..
வரலாற்றைப்பார்க்கும் போது தென்னிலங்கையில் ஜேவிபியினர் தாக்கப்பட்ட போது அவர்கள் யாழ்ப்பாணத்தில் வந்து தங்கியுள்ளார்கள் என்று மூத்த ஊடகவியலாளர் பிறேம்,தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
“போர் உருவாக முன்னரும் கடல்வழி மார்க்கமாக கடத்தலுக்கு வடக்கு மாகாணம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
இதனை அவர்களிடம் கேட்டாலே அவர்களை யாரெல்லாம் அவர்களை காப்பாற்றினார்கள் என்பது தெரியும். அதேபோல் தான் தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் இலகுவாக தப்பிப்பதற்கு யாழ்ப்பாணத்தை நோக்கி வருகின்றார்கள்.
எனவே திட்டமிட்டு இந்தபகுதி குற்றச்செயல்களுக்கான இடமாக மாறிவருகின்றதுஎன்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்கம் செய்பவர்கள் போதைப்பொருளை கடத்துகிறார்கள் என்பது போன்ற தோற்றப்பாட்டை இந்திய புலனாய்வு அமைப்பினர் ஏற்படுத்துகின்றார்கள்” என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பான முழுமையான தகவல்களை கீழுள்ள காணொளியில் காண்க..
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri