யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் ஆரம்பம்
கிரிக்கெட் நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தீர்க்கப்பட்டவுடன், யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் கட்டுமானப் பணிகள் மீண்டும் தொடங்கும் என விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.
பொது நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் நோக்கங்களுக்காக
உள்ளரங்க விளையாட்டு அரங்கம் அடங்கிய இத்திட்டத்திற்கு ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டு, ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், செப்டெம்பர் மாதத்திற்குள் இந்த வசதியை நிறைவு செய்யும் நோக்கம் இருந்ததாகவும், ஆனால் அரசியல் உள்நோக்கம் கொண்ட குழுக்களால் நீதிமன்ற வழக்கு தொடரப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அரசியல் குழுக்கள் யாழ்ப்பாண இளம் குழந்தைகளின் எதிர்கால வாய்ப்புகளை அழித்துவிட்டன.
அரசியல் நோக்கங்களுக்காக குழந்தைகளின் கனவுகளையும் விளையாட்டு வாய்ப்புகளையும் அழிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்" என அமைச்சர் கமகே தெரிவித்துள்ளார்.