யாழில் காதலியை நீதிமன்றத்தில் வைத்து அறைந்தவருக்கு நேர்ந்த கதி
யாழ்ப்பாணத்தில் நீதிமன்றத்திற்குள் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது, நீதிபதியின் முன்பாக முன்னாள் காதலியின் கன்னத்தில் அறைந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதிமன்றத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆவரங்கால் கிழக்கு பகுதியை சேர்ந்த 26 வயதான இளைஞன் ஒருவரே இவ்வாறு 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் பக்கத்து வீட்டு யுவதியுடன் காதல் வசப்பட்டுள்ளார் . எனினும், பின்னர் அவரது நடத்தையால் அதிருப்தியடைந்த யுவதி, காதல் உறவை நிறுத்தியுள்ளார்.

பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
எனினும், அந்த இளைஞன் யுவதிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளதுடன், துன்புறுத்தல்களிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாரிடம் முறையிடப்பட்டதை தொடர்ந்து, இளைஞன் கைது செய்யப்பட்டு, மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார்.

இதன்போதான வழக்கு விசாரணையின் போது எதிராளி சாட்சியமளித்து விட்டு வரும்போது, சந்தேகநபர் நீதவானின் முன்பாக அவரது கன்னத்தில் அறைந்துள்ளார்.
இதன்போது இளைஞன் மீது பாலியல் துன்புறுத்தல், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்யுமாறு நீதவான் கட்டளையிட்டதுடன், அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சந்தேகநபருக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில்
உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 மணி நேரம் முன்
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri