யாழ்ப்பாணம் - கொழும்புக்கிடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் - கொழும்புக்கிடையிலான ரயில் சேவை எதிர்வரும் 3ஆம் திகதி புதன்கிழமை மாலை ஆரம்பமாவுள்ளது என யாழ். ரயில் நிலையப் பிரதான ரயில் நிலைய அதிபர் ரி.பிரதீபன் (R.Pradeepan)தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிடுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்ட கோவிட் தொற்று அபாய நிலை காரணமாக நாடு பூராகவும் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்போது, யாழ்ப்பாணம் - கொழும்பு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
கல்கிஸை - காங்கேசன்துறைக்கு இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 3 ஆம் திகதி மாலை ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் மூன்றாம் திகதி மாலை 5.30 மணிக்கு கல்கிஸையில் இருந்து புறப்படும் ரயில் காங்கேசன்துறையை வந்தடைந்து மறுநாள் 4ஆம் திகதி காலை 5.30 மணியளவில் காங்கேசன் துறையிலிருந்து புறப்பட்டுக் கொழும்புக்குப் பயணிக்கவுள்ளது.
எனினும், முற்பதிவு தொடர்பான எந்தவித தகவல்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனவே, எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகும் ரயில் சேவையானது வழமை போல் இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு ஒரு சேவையும் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு ஒரு சேவையுமாக சாதாரண ரயில் சேவை மாத்திரமே முதலில் ஆரம்பிக்கப்படவுள்ளது" என தெரிவித்துள்ளார்.
