யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட கொடூரம்: தாதிக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை
யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பயண தடை விதித்துள்ளது.
காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 08 வயது சிறுமியின் கையில் பொருத்தப்பட்ட “கானுலா” தவறாக பொருத்தப்பட்டதால், சிறுமியின் பாதிப்புக்கு உள்ளான நிலையில், சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன், அகற்றப்பட்டது.
பொலிஸில் முறைப்பாடு
அது தொடர்பில் சுகாதார அமைச்சு, யாழ். போதனா வைத்தியசாலை, வடமாகாண ஆளூநர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட விசாரணை குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து, சம்பவம் தொடர்பில் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தினர்.
அதனை தொடர்ந்து இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ். நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்த நிலையில், பெற்றோர் சார்பில் குறித்த தாதியார் வெளிநாடு தப்பி செல்லாதவாறு பயணத்தடை விதிக்க வேண்டும் என மன்றில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனை ஏற்றுக்கொண்ட மன்று தாதியருக்கு பயணத் தடை விதித்ததுடன், வழக்கினை
எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri