வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு தயாரில்லை.. யாழ். மாநகர முதல்வரின் அதிரடி பதில்
முறையான முன்னறிவிப்போ, தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என யாழ். மாநகர முதல்வர் மதிவதனி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், சதிகளின் பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், வேண்டுமானால் தன்னை எழுத்துமூலமான ஆவணத்துடன் நேரடியாக வந்து சந்தித்தால் அது தொடர்பில் பரீசலிக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பொறியியலாளரது கட்டுப்பாட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை அதிகாரியின் கீழ் செயற்பட அனுமதிக்குமறு கோரி யாழ். மாநகர சுகாதார சிற்றூழியர்கள் பணிப் பகிஸ்கரிப்பு போரட்டம் ஒன்றை நேற்று முன்னெடுத்தனர்.
முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
யாழ். மாநகரின் மாதாந்த அமர்வு நேற்று (12) இடம்பெற்ற நிலையில், இது தொடர்பில் உறுப்பினர்கள் முதல்வரிடம் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், அனைத்து மாநகர, நகரசபைகளினது சுகாதார பகுதிகள் பிராந்திய சுகாதார அதிகாரியின் கீழ் தான் இருந்து வருகின்றது. ஆனால் யாழ். மாநகரின் சுகாதார பிரிவு மட்டும் பொறியியலாளரது கட்டுப்பாட்டில் இருக்கின்றது.
அதனால் நாளாந்தம் பல்வேறு நடைமுறைப் பிரச்சினைகள் உருவாகி வருகின்றன. எனவே, இவ்வாறு இருக்கும் நடைமுறையை மாற்றி பிராந்திய சுகாதார அதிகாரியின் கீழ் கொண்டுவரல் வேண்டும்.
அத்துடன், ஊழியர்களது நிரந்தர நியமனம், இடமாற்றம், உழவு இயந்திர ஒப்பந்தங்கள் மூலம் வகைதெரியப்படும் திண்மக்கழிவுகள் பிரித்தாழ்கையில் இருக்கும் குழப்பங்கள் உள்ளிட்ட சில நடைமுறை பிரச்சினைகளுக்கு தீர்வு, கண்காணிப்பாளர்களது இடமாற்றம் உள்ளிட்ட விடையங்களை முன்னிறுத்தி ஊழியர்கள் போராட்டம் முன்னெடுத்துள்ளனர்.
இவர்களது பிரச்சினைக்கு தீர்வை வழங்க மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உறுபினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



2000ஆம் ஆண்டு முதல் இதுவரை அதிக வசூல் செய்த இந்திய படங்கள் என்னென்ன தெரியுமா? முழு பட்டியல் இதோ Cineulagam
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam