யாழ். மத்திய கலாசார நிலையம் மாநகர சபையிடமே கையளிக்க வேண்டும்: அர்ஜுன் சம்பத் (photo)
யாழ். மத்திய கலாசார நிலையத்தை யாழ்.மாநகர சபையிடமே கையளிக்க வேண்டும் என தெரிவித்த இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அதற்கான அழுத்தங்களை இந்திய அரசாங்கத்திற்கு வழங்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக மையத்தில் நேற்று (19.02.2023) நடந்த ஊடக சந்திப்பில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இந்திய அரசாங்கம் இலங்கை மக்களுக்காக தமது சொந்த நிதியில் யாழ்ப்பாணம் மத்திய கலாசார நிலையத்தை உருவாக்கி கையளித்துள்ளது.

13ஆம் திருத்தம்
குறித்த கட்டடத் தொகுதி யாழ். மாநகர சபையிடம் கையளிக்கப்பட வேண்டும். ஈழத் தமிழர்களுக்காக இந்தியா தொடர்ந்தும் குரல் கொடுக்கவும் செயற்படவும் தயாராக இருக்கின்ற நிலையில் 13ஆம் திருத்தம் தொடர்பில் சிலர் அறியாமல் பேசுகின்றனர்.

தொல்லியல் திணைக்களத்தினரின் செயற்பாடுகள்
13ஆம் திருத்தம் நடைமுறைப்படுத்த வேண்டும். இங்கு நடைபெறுகின்ற மதமாற்றங்கள் மற்றும் இந்து மதத்திற்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பிலும் நாம் கவனத்தில் கொள்வோம்.
திருகோணமலையில் உள்ள திருகோணேச்சர ஆலயம் தொடர்பாகவும் அங்கு தொல்லியல்
திணைக்களத்தினரின் செயற்பாடுகள் தொடர்பாகவும் நாங்கள் இந்திய அரசாங்கத்தின்
கவனத்திற்கு கொண்டு செல்வோம் என தெரிவித்துள்ளார்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri