சுயாதீனமாக செயற்பட முடியாத பொதுச்சேவை ஆணைக்குழு: யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் சாடல்
பொதுச்சேவை ஆணைக்குழு சுயாதீனமாக செயற்பட முடியாதா என யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத் தலைவர் விக்னேஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
யாழ். மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கத்தினர் நேற்று (28) ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அதன் தலைவர் குலரட்ணம் விக்னேஸ் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இன்று நாம் இலங்கை ஆசிரிய சங்க உபதலைவர் தீபன் திலீசன் மற்றும் எமது சங்க உபதலைவர் ரஜீவன் ஆகியோருடன் இணைந்து கல்லூரியின் அதிபர் நியமனம் தொடர்பாக அதனால் எழுந்துள்ள குழப்பநிலை தொடர்பாக சில தெளிவுபடுத்தல்களை வழங்கலாம் என்று இந்த பத்திரியையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்துள்ளோம்.
யாழ். மாவட்டத்தில் வடக்கில் நிறுவனமயப்படுத்தப்பட்ட கல்விச் செயற்பாட்டை அறிமுகப் படுத்திய கல்லூரி எமது கல்லூரி, பல சாதணைகளைப் படைத்துள்ளது.
மேலும், பல சாதணையாளர்களை உருவாக்கியுள்ள கல்லூரி ஆனால் இன்று பல்வேறு குளறுபடி, அதிகார துஸ்பிரயோகம் காரணமாக மாணவர்கள், பெற்றோர்கள், 90 சத வீகிதமான பழைய மாணவர்கள் ஆகியோர் குழப்பத்திற்கு ஆளாகி நிற்கின்ற நிலையினை அதிபர் நியமனம் சார்ந்த இழுபறிநிலை இட்டு நிற்கின்றது” என்றார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
மேலும்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |