யாழில் இருந்து சென்ற பேருந்து பாரிய வெள்ளத்தில் சிக்கியது - மீட்கும் பணியில் ஹெலிகொப்டர்
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று பாரிய வெள்ளத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ராஜாங்கனை பகுதியில் வீதியை ஊடறுத்து செல்லும் வெள்ளத்தில் பேருந்து சிக்கியுள்ளதாக புத்தளம் மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பேருந்தில் சிக்கியுள்ள பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்பு நடவடிக்கை
இதற்காக பெல் 212 ஹெலிகாப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த பேருந்தில் 70 பயணிகள் பயணித்ததாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பேருந்தில் உள்ள பயணிகளை காப்பாற்றும் நடவடிக்கையில் இரண்டு இராணுவ குழுவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவிக்கப்பட்டிருந்து போதும், சிலர் பொறுப்பற்ற வகையில் செயற்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பற்றியெரியும் ஈரான்... போர்க்களமான தெருக்கள்: இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள வர்த்தகப் பாதிப்பு News Lankasri