தனது கணவரின் மரணத்திற்கு கடற்படையும் காரணம் - யாழில் கொலை செய்யப்பட்டவரின் மனைவி வாக்குமூலம்

By Thulsi Mar 13, 2024 12:25 PM GMT
Report

கணவரின் இறப்பிற்கு கடற்படையும் ஒரு காரணமென வட்டுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி கொலை தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொன்னாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த தம்பதியரை கடத்திச் சென்று கணவரை கூர்மையான ஆயுதங்களால் வெட்டி கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.

கொலை சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

யாழில் கடத்தப்பட்ட இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு: பிரேத பரிசோதனையில் வெளியான தகவல்

வாகனத்தில் கடத்திச் சென்றனர்

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த 23 வயதான குடும்பஸ்தர் ஒருவர் தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு நேற்றுமுன்தினம்(11) சென்று விட்டு, வட்டுக்கோட்டை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த வேளையில் பொன்னாலை பாலத்திற்கு அருகில் இரண்டு வாகனங்களில் காத்திருந்த சுமார் 15 பேர் கொண்ட குழுவினர் அவர்களை அச்சுறுத்திய நிலையில் குறித்த இளைஞன் தனது மனைவியுடன் கடற்படை முகாமினுள் சென்று அடைக்கலம் கோரியுள்ளார்.


இந்நிலையில் கடற்படையினர் அங்கிருந்து வெளியேறுமாறு தம்பதியினரை கலைத்துள்ளனர்.

கடற்படை முகாம் முன்னே நின்ற வன்முறை கும்பல் கணவனை ஒரு வாகனத்திலும் மனைவியை மற்றைய வாகனத்திலும் கடத்திச் சென்றதுடன் மனைவியை அராலி பகுதியில் இறக்கி விட்டுள்ளனர்.

யாழில் இளம் குடும்பஸ்தர் கொலையில் சிக்கிய கார்

யாழில் இளம் குடும்பஸ்தர் கொலையில் சிக்கிய கார்

வன்முறைக்கும்பல் 

மேலும் அவரது கணவன் மீது வன்முறைக்கும்பல் கடுமையான தாக்குதலை மேற்கொண்டு வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றின் முன்பாக படுகாயங்களுடன் வீசி விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தனது கணவரின் மரணத்திற்கு கடற்படையும் காரணம் - யாழில் கொலை செய்யப்பட்டவரின் மனைவி வாக்குமூலம் | Jaffna Boy Murder In Addukodai Update

இதையடுத்து அவரை மீட்ட வைத்தியசாலை பணியாளர்கள் நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் "உயிரைக் காப்பாற்றும்படி கெஞ்சிய எம்மை கடற்படை காப்பாற்றியிருந்தால் என் கணவர் கொலையுண்டிருக்க மாட்டாரென வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் தொடர்பில் உயிரிழந்தவரினுடைய மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.

கடற்படையும் ஒரு காரணம்

மேலும் தெரிவித்த அவர் 'என் கணவரின் சாவுக்கு கடற்படையும் ஒரு காரணம்' எனவும் தெரிவித்துள்ளார்.

தனது கணவரின் மரணத்திற்கு கடற்படையும் காரணம் - யாழில் கொலை செய்யப்பட்டவரின் மனைவி வாக்குமூலம் | Jaffna Boy Murder In Addukodai Update

அதேவேளை குறித்த இளைஞனின் இறப்பு தொடர்பில் சட்டமருத்துவ அதிகாரி உ.மயூரதன் நேற்று அறிக்கையிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், கூரிய ஆயுதங்களால் கொடூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டும் மற்றும் மூச்சுக் குழாய்க்குள் குருதி சென்றதாலும்தான் இறப்புச் சம்பவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பலாலி ஊடான சென்னை விமான சேவையில் ஏற்படவுள்ள மாற்றம்

யாழ். பலாலி ஊடான சென்னை விமான சேவையில் ஏற்படவுள்ள மாற்றம்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தூதரகத்தில் ராபர்ட் பயஸ், முருகன் முன்னிலை

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இலங்கை தூதரகத்தில் ராபர்ட் பயஸ், முருகன் முன்னிலை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW   


மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Scarborough, Canada

19 May, 2025
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், தெமட்டகொடை, Markham, Canada

20 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், கொழும்பு

19 May, 2021
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US