யாழில் மனைவியை பிரிந்து வாழ்ந்த இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்பு
யாழில் மனைவியை பிரிந்து வாழ்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
கீரிமலை வீதி, நல்லிணக்கபுரம் பகுதியைச் சேர்ந்த சிறிமோகன் கஜேந்திரன் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சைப் பலனின்றி மரணம்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த ஒன்றரை வருடங்களாக மனைவியை பிரிந்து வாழ்ந்துள்ளார். கடந்த 22ஆம் திகதி அதிகாலை மனைவியின் தந்தையின் வீட்டுக்கு சென்று தனக்கு தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார்.
பின்னர் உறவினர்கள் அவரை மீட்டு தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 17 மணி நேரம் முன்

இந்த வாரம் விஜய் டிவியில் ஞாயிறு ஸ்பெஷலாக ஒளிபரப்பாக போகும் சீரியல்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள் Cineulagam

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
