யாழில் சோகம் : பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்
யாழ்ப்பாணம் - அராலி பகுதியில் தீ விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அராலி தெற்கு, வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த அம்பலவாணர் நாகேந்திரம் (வயது 69) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நடக்க முடியாத நீரிழிவு நோயாளி ஆவார்.
கடந்த 22ஆம் திகதி வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் இதன்போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டது. ஏற்றப்பட்ட மெழுகுவர்த்தியானது அவரது ஆடையில் பற்றி அவர் தீ காயங்களுக்கு உள்ளாகினார்.
காயமடைந்தவர் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 19 மணி நேரம் முன்

ஈஸ்வரியை சீக்ரெட்டாக வந்து சந்தித்த நபர், பிரச்சனையில் சிக்கப்போகும் குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
