கட்டுநாயக்க விமான நிலையத்தில் பிரித்தானியா வாழ் தமிழ் இளைஞன் கைது
பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த தமிழ் இளைஞன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 39 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்தில் கைது
இந்த குற்றச்சாட்டின் கீழ் இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் ஆவணங்களை விமான நிலைய அதிகாரிகளால் சோதனையிட்ட போது, கடவுச்சீட்டு போலியானது என தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் கடந்த 2004 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக மன்னாரிலிருந்து படகு மூலம் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றவர் என தெரிவிக்கப்படுகிறது.
அங்கிருந்து பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்ற நிலையில் மீண்டும் இலங்கைக்கு நாடு திரும்பிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 12
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri