யாழ். கோப்பாய் பகுதியில் தாக்குதல் சம்பவம்! - இருவர் படுகாயம்
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வன்முறை கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கானவர்களின் வீட்டினுள் இருந்து மூன்று வாள்களை மீட்டுள்ள கோப்பாய் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று (28) இரவு புகுந்த கும்பல் ஒன்று வீட்டில் இருந்த 30 வயது மற்றும் 26 வயதான ஒருவர் மீதும் இரும்பு கம்பிகளால் தாக்கி வாளினால் வெட்டி படுகாயம் ஏற்படுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன், வீட்டினை சுற்றி முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் போது, வீட்டினுள் இருந்து மூன்று வாள்களை மீட்டுள்ளனர்.
குறித்த வாள்கள், வீட்டில் இருந்தவர்களுடையதா ? அல்லது தாக்குதலாளிகள்
தாக்குதல் மேற்கொண்டு விட்டு அவற்றை கைவிட்டு சென்றுள்ளனரா ? என பொலிஸார்
விசாரணைகளை ஆரம்பித்து உள்ளனர்.





siragadikka aasai: படுமோசமான முத்து.. யாரும் எதிர்பார்க்காத திருப்பம்- பேரானந்தத்தில் விஜயா Manithan

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
