யாழ். சங்கானையில் வடக்கு ஆளுநரால் திறந்து வைக்கப்பட்ட அம்மாச்சி உணவகம்
யாழ்ப்பாணம்(Jaffna) சங்கானை பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் அம்மாச்சி உணவகமானது திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த உணவகமானது இன்றைய தினம்(25.06.2024) வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸினால் (P. S. M. Charles) திறந்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாரம்பரிய உணவகம்
வலிகாமம் மேற்கு பிரதேச சபையானது மக்கள் பிரதிநிதிகளின் ஆட்சியில் இருந்த காலப்பகுதியில் சங்கானை பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியை அம்மாச்சி பாரம்பரிய உணவகமாக உருவாக்குவது என்ற தீர்மானத்திற்கு அமைவாக இந்த உணவகம் திறக்கப்பட்டுள்ளது.
இதன்போது உள்ளூர் எழுத்தாளர்கள், உள்ளூர் விவசாயிகள் கௌரவிக்கப்பட்டதோடு, விசேட தேவையுடைய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும், விசேட தேவையுடைய பெண்களுக்கு வாழ்வாதார உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் விருந்தினர்கள், சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |









ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

ஆபத்தான நிலையில் ஈஸ்வரி, தனது அம்மாவுக்கு செக் வைத்த ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
