யாழ்ப்பாண விமான நிலைய சேவை தொடர்பான அறிவிப்பு
யாழ்ப்பாணம் சென்னை இடையேயான விமான சேவை எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமானது 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவிட் தொற்றுக் காரணமாக மூடப்பட்டு இன்றுவரை மூடப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது.
முற்பதிவு நடவடிக்கை
இவ்வாறு மூடிய நிலையில் உள்ள யாழ்ப்பாணம் விமான நிலையம் மீண்டும் டிசம்பர் 12 ஆம் திகதி திறக்கப்பட்டு சென்னைக்கான விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆரம்ப பணிகளிற்காக நேற்றைய தினம் சுற்றுலா அதிகார சபையில் இருந்து இரு அதிகாரிகள் யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு வந்து பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
இவ்வாறு இடம்பெறவுள்ளதாக கூறப்படும் விமான சேவைக்கான விமான சிட்டைகள் இன்று
முதல் முற்பதிவு செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விலைக்கு வாங்கப்படும் தமிழ் பெண்கள்! 17 மணி நேரம் முன்

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் வரப்போகும் பிக்பாஸ் 6 புகழ் ஷிவின்- எந்த தொடர் தெரியுமா? Cineulagam

நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் தங்கையை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் சங்கீதா போலவே இருக்கிறாரே Cineulagam

நிலவறைக்குள் கேட்ட குழந்தைகளின் சத்தம்... பொதுமக்கள் புகாரையடுத்து தெரியவந்த அதிர்ச்சியளிக்கும் விடயம் News Lankasri

பல முறை கெஞ்சிய தாயார்... திருப்பி அனுப்பிய மருத்துவமனை: நொறுங்கிப்போன பிரித்தானிய குடும்பம் News Lankasri
