யாழ்.விமான நிலையம் தொடர்பில் அமைச்சரவை வழங்கியுள்ள அனுமதி
யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கான விமானமேறல் அறவீட்டு வரிச்சலுகையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வரிச்சலுகை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு பயணச்சீட்டுக்களை மலிவு விலையில் வழங்குவதற்காகவும், அதனூடாக விமான நிலையத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் அறிவிக்கப்பட்டது.
வரிச்சலுகை காலம் நீடிப்பு
யாழ்ப்பாண விமான நிலையத்தின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு, சர்வதேச விமான நிறுவனங்களால் செலுத்தப்பட வேண்டிய விமானமேறல் அறவீட்டு வரியில், 50 சதவீதத்தை மாத்திரம் அறவிடுவதற்கு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது.
எனினும் இந்த வரிச்சலுகை காலம் கடந்த 11 ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த வரிச்சலுகை காலத்தை நீடிக்க விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |