யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞனொருவர் பலி
அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - வடமராட்சி வீதி வல்லை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றையதினம் இரவு 07.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது, பருத்தித்துறை - புற்றாளை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் மணிகண்டன் என்ற 21 வயதுடைய இளைஞனொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மாட்டுடன் மோதுண்டு பின்னர் எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

படுகாயமடைந்த இளைஞர் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan