கோர விபத்தில் சிக்கிய வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து (Photos)
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தொன்று இன்றிரவு (03.08.2023) விபத்திற்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பேருந்தின் சாரதியொருவர் படுகாயமடைந்த நிலையில் பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து இன்றிரவு 7 மணியளவில் புத்தூர் சந்தி பகுதியில் உள்ள பேருந்து பயணிகள் தரிப்பிடத்தில் மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இந்த விபத்து தொடர்பில் பேருந்தில் முன் இருக்கையில் பயணித்த பயணிகள் தெரிவிக்கையில்,
விபத்து இடம்பெறுவதற்கு சற்றுமுன்னர் திடீரென பேருந்தின் பிரேக் மற்றும் ஸ்ரேறிங் இயங்கவில்லையென சாரதி தெரிவித்த சில விநாடிகளில் விபத்து இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ளனர்.
இவ்விபத்தின் போது யாழ்ப்பாணத்தில் இருந்த சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து மற்றும் டிப்பர் வாகனங்களும் சிறிதளவு சேதமடைந்துள்ளதோடு 50 வருடங்களுக்கு மேற்பட்ட பழமையான பயணிகள் தரிப்பிடம் முற்றாக இடிந்து விழுந்துள்ளது.
இந்நிலையில், விபத்து தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் மேலதிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அண்மையில், யாழ்ப்பாணத்தில் வைத்து வழங்கப்பட்ட இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான புதிய பேருந்தே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





உள்ளூராட்சி தேர்தலை தமிழர் தரப்பு எவ்வாறு எதிர்கொள்வது..! 14 மணி நேரம் முன்

குட் பேட் அக்லி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது பிரியா வாரியர் இல்லை! வேறு யார் தெரியுமா Cineulagam

ஆடுகளம் தொடரை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாக போகும் புதிய தொடர்.. நடிகர்கள், சீரியல் பெயர் இதோ Cineulagam

ஐபிஎல் 2025யில் அதிகதொகைக்கு எடுக்கப்பட்டு இன்னும் விளையாடாத வீரர்கள்: காத்திருக்கும் தமிழர் நடராஜன் News Lankasri
