யாழில் மதுபோதையில் நடுவீதியில் உறங்கியவருக்கு நேர்ந்த கதி
யாழில் மதுபோதையில் வீதியில் உறங்கியவர் மோட்டார் சைக்கிள் மோதி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
கோப்பாய் - கட்டைப்பிராயை சேர்ந்த (வயது 56) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
குறித்த நபர் நேற்றிரவு 10 மணியளவில் மதுபோதையில் பருத்தித்துறை - யாழ்ப்பாணம1 வீதியில் உறங்கியுள்ளார். இதன்போது வீதியால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதி விபத்திற்குள்ளாகியுள்ளார்.
குறித்த விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்பின்னர் அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
திடீர் மரண விசாரணை
மேலும், சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
ஒன்றாக சுற்றுலா சென்றுள்ள எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... எங்கு சென்றுள்ளார்கள் பாருங்க Cineulagam
தனக்கு தெரியாமல் செந்தில் செய்த காரியம், செம ஷாக்கில் மீனா... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam