எரிபொருள் நெருக்கடி! பண்டிகை காலத்தில் கோழி இறைச்சி விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
பண்டிகை காலத்தில் கோழி இறைச்சியை பற்றாக்குறையின்றி சந்தைக்கு அனுப்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நெருக்கடி காரணமாக கோழி விலை உயரும் அபாயம் இருந்தபோதிலும், அதன் விலையை ரூ. 1,250 ஆக நிர்ணயிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் அஜித் குணசேகர கூறியுள்ளார்.
தீவன விலைகள் வேகமாக அதிகரிப்பு
இதற்கிடையில், உலக சந்தையில் கால்நடை தீவன விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

எரிபொருள் பற்றாக்குறையால் போக்குவரத்துச்செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், டீசல் திடீரெனத் தீர்ந்துவிட்டால், போக்குவரத்து தடைபட்டால் நம்மால் எதிர்காலத்தை கணிக்க முடியாது.
இறைச்சி மற்றும் முட்டைகளை பற்றாக்குறையின்றி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கோழிக்கு அதிக தேவை ஏற்பட்டால், விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் எனவும், பற்றாக்குறையின்றி விநியோகத்தை வழங்க நம்புகிறோம் என விளக்கமளித்துள்ளார்.
விரைவில் திருமணம் செய்யப்போகும் அனிருத் - காவ்யா மாறனின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Cineulagam
எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri