விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலை சிகிச்சைப்பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி - வேரவில் - பூநகரி பகுதியைச் சேர்ந்த பஞ்சாட்சரம் மௌதீஸ்வரன் (வயது 45) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி குறித்த நபர் வேரவில் பகுதியில் இருந்து முழங்காவில் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தபோது முழங்காவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக உள்ள மஞ்சள் கோட்டின் ஊடாக வலது பக்கம் திருப்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார்.
திடீர் மரண விசாரணை
முழங்காவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நள்ளிரவு 12 மணி அளவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப்பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (18) மாலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளதுடன், உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |