யாழில் வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் விபத்து: மூவர் படுகாயம்
யாழ்ப்பாணம் (Jaffna) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணவி பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து மதில் மற்றும் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயம் அடைந்துள்ளனர்.
குறித்த விபத்தானது இன்று(05.04.2024) மதியம் ஏற்பட்டுள்ளது.
வட்டுக்கோட்டை பகுதியில் இருந்து நவாலி பகுதியை நோக்கி ஒரு மோட்டார் சைக்கிளில் மூன்று இளைஞர்கள் பயணித்துள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதி
அவர்கள் துணவியில் உள்ள குளத்திற்கு அருகிலுள்ள வளைவில் திரும்ப முற்பட்டபோது வேக கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக அருகில் உள்ள மதிலுடன் மோதி, பின்னர் மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது அதில் பயணித்த தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி பயிலும் 18 மற்றும் 17 வயதுகளை உடைய மூன்று மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பருத்தித்துறை, நவாலி மற்றும் நாவற்குழி பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
பயணித்த மூவரில் ஒருவர் மட்டுமே தலைக்கவசம் அணிந்திருந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
சரணடைந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்களின் தகவல்களை வழங்க மறுத்த இராணுவம்: மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் மிகப்பெரிய பணக்காரர் காலமானார்: வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கிய இந்தியர் News Lankasri
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri