யாழ்.அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் : வெளியான அநுர தரப்பின் நிலைப்பாடு

Jaffna Death Gun Shooting Nalinda Jayatissa
By Rakesh Feb 11, 2026 02:59 AM GMT
Report

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று(10.02.2026) அதிகாலை பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயதுச் சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உயர்மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

யாழில். சிறுவன் மீது துப்பாக்கி சூடு.. உயிரிழப்புக்கான காரணம் குறித்து வெளியான தகவல்

யாழில். சிறுவன் மீது துப்பாக்கி சூடு.. உயிரிழப்புக்கான காரணம் குறித்து வெளியான தகவல்

எச்சரிக்கையையும் மீறி வாகனம் பயணித்ததால்

யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை வீதியில், அல்லைப்பிட்டி சந்தியில் அமைந்துள்ள பொலிஸ் காவலரணில் கடமையில் இருந்த பொலிஸார், சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்றை நிறுத்துமாறு கட்டளையிட்டுள்ளனர்.

எனினும், அவ்வாகனம் பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்ததால் துப்பாக்கிப் பிரயோகம் முன்னெடுக்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்.அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் : வெளியான அநுர தரப்பின் நிலைப்பாடு | Jaffna 17 Years Boy Gun Shoot Death

சம்பவம் குறித்து அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் விளக்குகையில்,  "வாகனத்தை நோக்கி நேரடியாகத் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்னதாக, வானத்தை நோக்கிப் பலமுறை எச்சரிக்கை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளன.

அந்த எச்சரிக்கையையும் மீறி வாகனம் பயணித்ததாலேயே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து ஊர்காவற்றுறை பொலிஸாரும், யாழ். மாவட்டக் குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்றும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாது

இந்தச் சம்பவத்தில் வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த அல்பினோ அருள் பயாஸ் (17 வயது) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.

யாழ்.அல்லைப்பிட்டி துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் : வெளியான அநுர தரப்பின் நிலைப்பாடு | Jaffna 17 Years Boy Gun Shoot Death

துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சிறுவனின் சித்தி இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "குடும்பக் கஷ்டம் காரணமாகவே எனது பெறாமகன் சிறு வயதிலேயே வேலைக்குச் சென்றார். சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாத போதிலும் அவர் வாகனம் ஓட்டுவதைத் தொழிலாகக் கொண்டிருந்தார்.


நேற்று அதிகாலை ஆட்களை வேலைக்கு ஏற்றுவதற்காகச் சென்றபோதே இந்த அநியாயம் நடந்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்றமைக்காக 17 வயதுச் சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தச் சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களிடம் மறைமுகமாக வசூலிக்கப்படும் நிதிகள்.. வடக்கு ஆளுநர் வெளியிட்ட தகவல்

மாணவர்களிடம் மறைமுகமாக வசூலிக்கப்படும் நிதிகள்.. வடக்கு ஆளுநர் வெளியிட்ட தகவல்

மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US