வவுணதீவு பாலத்தின் கீழ்கிடந்த ஜெக்கெட்! ஏறாவூரில் புதிதாய் சிக்கிய மற்றுமொரு புலனாய்வாளர்
கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் திகதி இரவு, மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவுப் பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டும் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் இடம்பெற்றபோது, விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் மீது பலி சுமத்தப்பட்டு, அஜந்தன் என்ற முன்னாள் போராளி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் இந்த விசாரணையை தவறாக வழிநடத்தியதாக அப்போதைய மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் புலனாய்வுத்துறை பொறுப்பாளர் சற்று நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரோடு ஏறாவூரை சேர்ந்த இன்னுமொருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்த பட்டியலில் இப்போது விசாரணை வளையத்திற்குள் உள்வாங்கப்பட்டுள்ள சுமார் 35 ஆண்டுகால புலனாய்வுச்சேவையாளர் ஒருவர் மிக விரைவில் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அந்த நபர் தொடர்பாக கசிந்த சில இரகசியங்களைப்பற்றி பேசுகிறது ஐபிசி தமிழின் இன்றைய அதிர்வு நிகழ்ச்சி..





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 7 மணி நேரம் முன்

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
