இத்தாலி வெளிவிவகார பிரதி அமைச்சர் இலங்கை விஜயம்
இத்தாலியின் வெளிவிவகார மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு பிரதி அமைச்சர் மரியா ட்ரிபோடி நாளை(03) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய உள்ளார்.
இலங்கை வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மரியா எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் நாட்டில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், இத்தாலியிலிருந்து இலங்கைக்கு சிரேஸ்ட பிரதிநிதியொருவர் விஜயம் செய்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் ஆலோசனை
இதனால் இந்த விஜயம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர உடன் இணைந்து இத்தாலிய பிரதி அமைச்சர் மரியா, இலங்கை - இத்தாலி அரசியல் ஆலோசனைகளின் முதல் அமர்விற்கு தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கிடையேயான அரசியல் ஆலோசனைக் கலந்துரையாடல் அமைப்பை உருவாக்கும் நோக்கில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்(MoU) கையெழுத்திடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டவர்களுடனும் இத்தாலியின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ட்ரிபோடி, சந்திப்புக்களை நடத்த உள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





வட கொரியாவின் நான்கு கொடூர முகாம்கள்... செத்துப்பிழைக்கும் 65,000 கைதிகள்: அதிர்ச்சி பின்னணி News Lankasri
