கொழும்பில் தமிழரசு கட்சி போட்டியிடாது! சுமந்திரன் அறிவிப்பு

Colombo Ilankai Tamil Arasu Kachchi Government Of Sri Lanka Local government Election
By Thileepan Mar 09, 2025 11:21 AM GMT
Report

 எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதில்லை என தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று (09.03.2025) காலை முதல் மதியம் வரை வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

அதன் பின் வவுனியா, குருமன்காடு காளி கோவில் வீதியில் கட்சியின் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டு ஊடக சந்திப்பு நடைபெற்றது.

யாழில் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூபர் கிருஷ்ணா! பொலிஸாரிடம் ஒப்படைப்பு

யாழில் மடக்கிப் பிடிக்கப்பட்ட யூடியூபர் கிருஷ்ணா! பொலிஸாரிடம் ஒப்படைப்பு

அநுர அலை 

அதில் சுமந்திரன் கருத்து தெரிவிக்கையில், "மத்திய செயற்குழுக் கூட்டத்தின் போது உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் தொடர்பாக மட்டுமே ஆராயப்பட்டது.


கட்சியின் மத்திய செயற்குழு உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிடுவது தொடர்பான தீர்மானங்களை ஏகமனதாக எடுத்துள்ளது. அதன்படி வடக்கு - கிழக்கு மாவட்டங்களின் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களிலும் இலங்கை தமிழரசுக் கட்சி தனித்து போட்டியிடும்.

கொழும்பில் தமிழரசு கட்சி போட்டியிடாது! சுமந்திரன் அறிவிப்பு | Itak Will Not Compet In Colombo Sumanthiran

இந்த தேர்தல் முக்கியமானதொரு தேர்தல். நாங்கள் ஒவ்வொரு தேர்தல்களையும் முக்கியமானதொரு தேர்தல் என்றே கூறி வந்துள்ளோம். உண்மை அது தான். ஒவ்வொரு தேர்தல்களில் அவ்வக் காலப்பகுதிகளில் வேறு வேறு நோக்கங்களுக்காக முக்கியமான தேர்தலாக இருக்கும்.

இம்முறை நாடு அநுர அலையில் உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி தனிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. வடக்கு, கிழக்கில் மட்டக்களப்பு தவிர ஏனைய மாவட்டஙனளில் அநுர அலையில் எமது மக்களின் வாக்குகள் சென்றுள்ளன. 

திருகோணமலையில், மட்டக்களப்பில் நாம் பெரும்பான்மை பெற முடியாது. வடக்கில் நாம் தான் பெரும்பான்மை. எனினும் மக்கள் அநுர அலையில் சிக்கி ஜனாதிபதி தேர்தலைக் காட்டிலும் நாடாளுமன்றதேர்தலில் அதிக வாக்குளை வழங்கியிருந்தார்கள்.

ஜனாதிபதித் தேர்தலில் நாம் ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் பிரேமதாச அவர்களே வடக்கு - கிழக்கில் பெரும்பான்மை பெற்றார். ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் இந்த நிலை மாறியது. தற்போது அநுர அலை குறைந்து விட்டது என்கிறார்கள் சிலர். அப்படி கூற முடியாது. அநுர அலை தற்போதும் இருக்கிறது. அது குறைவடைய சில காலம் செல்லலாம்.

கொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தின் திறந்த வெளி பெரிய சிலுவை பாதை (LIVE)

கொழும்பு ஜோசப் வாஸ் மன்றத்தின் திறந்த வெளி பெரிய சிலுவை பாதை (LIVE)

 தமிழ் கட்சிகள் 

நாம் கவனமாக கையாண்டு, நாடு அநுரவோடு இருக்கட்டும். நமது ஊர் நம்மோடு. நாம் வீட்டோடு என செயற்பட வேண்டும். எமது உள்ளூர் அதிகாரங்களை நாம் விட முடியாது. எனவே நாம் இந்த தேர்தலில் சிறப்பானவர்களை, செல்வாக்கு மிக்கவர்களை நிறுத்த வேண்டும். அதன் மூலமே அதிக வெற்றி வாய்ப்பை பெற முடியும்.

அவ்வாறான தீர்மானங்கள எடுக்கும் அதிகாரத்தை எமது மாவட்ட கிளைகளுக்கு வழங்கியுள்ளோம். தேர்தல் முடிந்த பின் ஆட்சி அமைக்கின்ற போது ஏனைய தமிழ் கட்சிகளுடனும் பேசி ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் தமிழரசு கட்சி போட்டியிடாது! சுமந்திரன் அறிவிப்பு | Itak Will Not Compet In Colombo Sumanthiran

மேலும் சில சபைகளின் நிலமையை கருத்தில் கொண்டு ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடலாம் என தீர்மானித்துள்ளோம். அந்தவகையில் வவுனியா வடக்கு, சம்மாந்துறை, ஏறாவூர் ஆகிய பகுதிகளில் ஏனைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதற்கான தமிழரசுக் கட்சியின் வாசல் திறந்தே உள்ளது.

வவுனியா வடக்கில் நாம் பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் பெரும்பான்மையினரிடம் அப்பிரதேச சபை செல்லும் வாய்ப்புள்ளது. சம்மாந்துறை, ஏறாவூர் ஆகிய பகுதிகளில் எம்மிடம் பெரும்பான்மை இல்லை. ஆகவே இணைந்து போட்டியிடலாம் என தீர்மானத்துள்ளோம். கொழும்பு மாநகர சபையில் தமிழ் மக்கள் வசிக்காத வட்டாரங்களும் உள்ளன.

அங்கு வேட்பாளர்களை நியமிப்பது சவாலான ஒரு நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு ஏனைய கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டாலும், அதன் வேட்பாளர்களின் பின்புலம் தொடர்பாக ஆராய்வதில் பல்வேறு சவால்கள் உள்ள காரணத்தினால் இம்முறை கொழும்பில் போட்டியிடுவதில்லை என மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். 

புல்மோட்டை கணிய மணல் தொழிற்சாலை ஊழியர்கள் தொடர் போராட்டம்

புல்மோட்டை கணிய மணல் தொழிற்சாலை ஊழியர்கள் தொடர் போராட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US