சர்வதேச விசாரணைக்கு தயாரா! அநுரவின் ஆட்சியை எச்சரித்த சிறிநேசன்
எங்களுடைய தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் சர்வதேச விசாரணை நடத்தப்பட்டு அந்த குற்றவாளிகளை தண்டிக்க அநுரவால் முடியுமா என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் எச்சரித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நேற்று (13) மாலை இடம்பெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் இந்த மாயைக்குள் விழுந்து இவர்களோடு அடிபட்டுப் போனால் தமிழ் தேசியம் என்பது வடக்கு கிழக்கில் பலவீனமடைந்து போகும்.
அதன்பின்னர் தட்டிக் கேட்பதற்குரிய கட்சி இல்லாமல் போய்விட்டால் எல்லோரும் அமைச்சுப் பதவிகளிலும் அநுர அணியினரோடு ஆலவட்டம் அடித்து செல்லக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.
தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற அலை அடிபடுகின்றது. அவர்கள் மூலமாக ஊழல் மோசடியற்ற ஆய்சி அமையட்டும்.
ஆனால் தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வை தராத வரைக்கும் நாங்கள் எமது தமிழ் தேசிய அரசியலை பலப்படுத்த வேண்டியது எமது தலையாய கடமையாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழரசுக்கட்சி என்ற ஒன்று இருப்பதன் காரணமாகவே இந்த மண்ணில் தமிழ் மக்கள் தனித்துவமாக வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மறந்து விடக்கூடாது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் கூட்டம் நேற்று (13) மாலை இடம்பெற்றபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம்
மேலும் தெரிவிக்கையில், “தமிழரசுக்கட்சி தமிழர்களுக்கு என்ன செய்தது என்பதை அனைவரும் இலகுவாக கேட்பார்கள்.
ஆனால் தமிழரசுக்கட்சி ஒன்று இருப்பதன் காரணமாகத்தான் இந்த மண்ணில் தமிழர்கள் தனித்துவமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என்பதை மறந்து விடக்கூடாது.
புத்தளம், நீர்கொழும்பு பகுதிகளில் தமிழர்கள் வாழ்ந்த நிலையில் அங்கு தமிழரசுக்கட்சியின் ஆதிக்கம் குறைந்து தேசிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகரித்த காரணத்தினால் அங்கு வாழ்ந்த தமிழர்கள் அரைகுறை தமிழர்களாக, தமிழை மறந்தவர்களாக மாறியிருக்கின்றார்கள்.
எங்களுக்கு உரிமை வேண்டும்
ஆனால் வடக்கு, கிழக்கில் 1949ஆம் ஆண்டு தொடக்கம் எமது கட்சி ஆற்றிய பணிகள் காரணமாக தமிழர்கள் இன்றும் தனித்துவமாக தமது பண்பாடுகளுடன் தலைநிமிர்ந்து நிற்கின்றார்கள் என்பதை மறக்ககூடாது.
தமிழரசுக்கட்சியானது உரிமையா சலுகையா எனக் கேட்கின்றபோது எங்களுக்கு உரிமை வேண்டும் என்று சொல்லுகின்ற கட்சியாகும்” என்றும் ஞா.சிறிநேசன் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri

ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம், பளார் விட்ட நபர், இவர்களுக்கும் உண்மை தெரிந்ததா? சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
