தமிழ் மக்களின் அபிலாசைகளை கேள்விக்குறியாக்கும் தமிழரசுக்கட்சி
இலங்கையை பொறுத்தவரையில் நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ் தேசிய அரசியல் பல்வேறு கோணங்களில் விவாதப்பட்டுக்கொண்டிருக்கின்றது.
அதிலும் இலங்கை தமிழரசுக்கட்சியினுடைய(Itak) செயற்பாடுகளையும் முடிவுகளையும் பற்றி தொண்டர்கள் முதல் கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வரை பல விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.
இந்நிலையில் தமிழரசக்கட்சியானது, தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகள் மீது கவனம் செலுத்தாமல் கட்சிக்குள் இருப்பவர்களின் லாபங்களையும் பிரபல்யமடைதலையுமே கவனத்தில் கொள்கின்றது என பிரித்தானியாவில் (United Kingdom) இருக்கும் அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் தெரிவித்துள்ளார்.
மேலும், இதன் காரணமாகவே பலர் கட்சியின் மீது அதிருப்பதியடைந்து வெளியேறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் விரிவாக அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு ...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |