திருகோணமலையில் கட்டுப்பணம் செலுத்திய தமிழரசு கட்சி
இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக திருகோணமலை மாவட்டத்துக்கான கட்டுப்பணம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் செலுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் இன்று(14) மாலை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.
இம்முறை தமிழரசுக் கட்சியானது திருகோணமலை மாநகர சபை, மூதூர் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, வெருகல் பிரதேச சபை, கிண்ணியா பிரதேசம், தம்பலகாமம் பிரதேச சபை ஆகிய சபைகளில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

கடுமையான உழைப்பு
இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சண்முகம் குகதாசன், இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கடுமையாக உழைப்பதன் மூலமாக போட்டியிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam