'பட்ஜெட்' வாக்கெடுப்பு! இன்று இணையவழியில் ஒன்றுகூடும் தமிழரசுக்கட்சி
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் இன்று(13) மாலை இணைய வழியில் ஒன்றுகூடி கலந்துரையாட இருக்கின்றன.
நாடாளுமன்றத்தில் அநுர அரசு சமர்ப்பித்துள்ள வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நாளை(14) வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
தமிழரசுக்கட்சி
வரவு - செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதா அல்லது நடுநிலை வகிப்பதா என்பது குறித்து இன்றைய கலந்துரையாடலில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கட்சி இன்று எடுக்கும் முடிவை நாளை நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் எம்.பிக்கள் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அரசு சமர்ப்பிக்கும் வரவு - செலவுத் திட்டத்தை ஆராய்ந்து அது தொடர்பில் முடிவெடுக்கும் தீர்மானத்தைக் கட்சியின் அரசியல் குழுவும் நாடாளுமன்றக் குழுவும் இணைய வழியில் கூடி இறுதி செய்ய வேண்டும் என அண்மையில் வவுனியாவில் கூடிய கட்சியின் மத்திய குழு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.