புலம்பெயர் உறவுகளால் வடக்கு மக்களின் முன்னேற்றத்திற்கு உதவ முடியும்: ஐ. நா சுட்டிக்காட்டு
புலம்பெயர் உறவுகளால் வடக்கு மாகாண மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவ முடியும் என ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச் தெரிவித்துள்ளார்.
மேலும், முன்னுரிமை வழங்க வேண்டிய திட்டங்களை அடையாளம் கண்டு அவற்றில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் என்ட்ரோ பிரஞ்ச்
(Marc - Andre Franche ) உள்ளிட்ட குழுவினர், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.
சார்ள்ஸை சந்தித்து கலந்துரையாடியபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளனர்.
சிறந்த பொறிமுறை
''சிறந்த பொறிமுறையின் ஊடாக முதலீடுகளை மேற்கொள்வது சிறந்தது.
வடக்கில் காணப்படும் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி பாரிய திட்டங்களை மேற்கொள்ளும் போது பிரதேச மக்களின் நலன்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் இயற்கை சக்தி வளங்களை பயன்படுத்தி மேற்கொள்ளும் திட்டங்களில் பெற்றுக்கொள்ளும் இலாபத்தில் அந்தந்த கிராம அபிவிருத்திக்கென ஒருதொகை நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
இதற்கமைய காணி உரித்துகள் வழங்கப்படுகின்றமை வரவேற்கப்பட வேண்டிய விடயம் எனவும், அத்துடன் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு சர்வதேச சமூகத்திடமிருந்து எவ்வாறான ஒத்துழைப்புகள் தேவை?
மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கையை நிறைவு செய்ய கண்ணிவெடி அகற்றும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டும்.” என மார்க் என்ட்ரோ தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |