விமர்சன அரசியலை விட்டுவிட்டு சேவை அரசியலை முன்னெடுத்தவர் சஜித் : இம்ரான் எம் . பி
பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும் சரி கோவிட் பிரச்சினையாக இருந்தாலும் சரி விமர்சன அரசியலை விட்டுவிட்டு சேவை அரசியலை முன்னெடுத்து அமைப்பு மாற்றம் செய்து காட்டியவர் சஜித் பிரேமதாச என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப்(Imran Maharoof) தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பங்கு கொண்ட கந்தளாய் பிரதேசத்தில் நேற்று(26) காலை இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு கூறியுள்ளார்.
பொருளாதார நெருக்கடி
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று எல்லாரும் கேட்கும் விடயம் அமைப்பு மாற்றம்(System change).இவர்கள் மேடைகளில்,போராட்டங்களில் அமைப்பு மாற்றம் பற்றி பேசினாலும் தேர்தல் என்ற ஒன்று வரும் போது அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை.
ஜனாதிபதி வேட்பாளர்களிலே அமைப்பு மாற்றத்தை செய்து காட்டியவர் சஜித் பிரேமதாச மட்டுமே. நாம் வரலாற்றில் பல எதிர்கட்சி தலைவர்களை கண்டுள்ளோம்.
அவர்கள் நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் அரசாங்கத்தை விமர்ச்சிக்கவும் அரசாங்கத்தை கவிழ்க்க என்ன செய்யலாம் என யோசித்தே நாம் கண்டுள்ளோம். ஆனால் வரலாற்றில் முதன்முறையாக அமைப்பு மாற்றத்தை மாற்றியவர் எமது தலைவர் சஜித் பிரேமதாச மட்டுமே .
அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்து பாடசாலைகளுக்கு உதவ முடியுமாக இருந்தால், வைத்தியசாலைகளுக்கு உதவ முடியுமாக இருந்தால் அவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் எவ்வாறான அபிவிருத்தியையும் அமைப்பு மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
