சிறீதரனின் வெற்றிக்கு மிகவும் பாடுபட்டவர் சார்ள்ஸ்: ரணில் பகிரங்கத் தகவல்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான போட்டியில் சிவஞானம் சிறீதரன் எம்.பி. வெற்றி பெற மிகவும் பாடுபட்டவர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பி. என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்று இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சில நாட்களுக்கு முன் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடாளுமன்றத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சென்றார்.
புதிய தலைவருக்கான போட்டி
கூட்டம் முடிந்ததும் அவரது அறையை நோக்கி அவர் விரைந்தார். அப்போது ஜனாதிபதியின் அறைக்கு அருகில் ஜனாதிபதியை எதிர்பார்த்துக்கொண்டு நின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்.
சார்ள்ஸைக் கண்டதும் ஜனாதிபதி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வருங்காலத் தலைவர் வந்து நிற்கின்றார் என்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரா? என்று கேட்டார்கள் ஜனாதிபதியுடன் வந்தவர்கள்.
"ஆம்.இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான போட்டியில் சிறீதரன் எம்.பியின் வெற்றிக்கு மிகவும் பாடுபட்டவர் இவர்தானே..." என்று பதிலளித்தார் ஜனாதிபதி. அப்படியே சார்ள்ஸ் நிர்மலநாதனை அறைக்குள் அழைத்துச் சென்று உரையாயாடினார் ஜனாதிபதி.
வடக்கின் அபிவிருத்திக்குப் புலம்பெயர் தமிழர்களை உதவச் சொல்லுங்கள் என்று சார்ள்ஸ் எம்.பியிடம் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri
