பாதிப்புக்களை சுகாதார அதிகாரிகள் மாத்திரமே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருப்பது நியாயமற்றது
பாடசாலைகளை மீண்டும் திறந்ததினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை சுகாதார அதிகாரிகள் மாத்திரமே பொறுப்பேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருப்பது நியாயமற்றது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை பொது சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்திருக்கிறார்.
மாணவர்களின் கல்வி தடையின்றி மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்வதற்காகவே பாடசாலைகளை மீண்டும் திறக்கும் முடிவு கல்வி அமைச்சினால் எடுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இத்தகைய தொற்று நோய்கள் பரவும் சந்தர்ப்பங்களில் பாடசாலைகள் திறக்கப்படும் போது சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிப்பதன் மூலம் மாணவர்கள் மற்றும் பிறரின் பாதுகாப்பை உறுதி செய்வது அனைவரின் பொறுப்பாகும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இதேவேளை தேவையான வழிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் நாங்கள் வழங்கியுள்ளோம் எனவும் சுகாதார சேவைகள்பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்திருக்கிறார்.