எவ்வளவு காலத்திற்கு நாட்டை முடக்குவது என கூற முடியாது - அஜித் ரோஹன
பயணக் கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்கு அமைய வீடுகளிலேயே தங்கி இருந்தால், எதிர்வரும் 14 ஆம் திகதி சில தளர்வுகளுடன் நாட்டை திறக்க முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
எனினும் பயணக் கட்டுப்பாட்டுச் சட்டங்களை கவனத்தில் கொள்ளாது செயற்பட்டால், மேலும் எவ்வளவு காலங்களுக்கு நாட்டை இவ்வாறு முடக்குவது என்பதை கூற முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் மகக்ள் தனிமைப்படுதத்ல் சட்டங்களுக்கு அமைய செயற்பட்டுள்ளனர் என தான் நம்புவதாகவும் இதனடிப்படையில், 14 ஆம் திகதி சில வரையறைகளுடன் நாட்டை திறக்க முடியும் என நம்புவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் எதிர்வரும் 14 ஆம் திகதி முடிவடைந்தாலும் தொற்றாளர்களின் கொத்தணி, இணை கொத்தணிகள் குறித்து கவனத்தில் கொண்டு, அது பற்றிய தொற்று நோய் தொடர்பான விஞ்ஞானிகள் மற்றும் சுகாதார நிபுணர்களின் நிலைமைப்பட்டுக்கு ஏற்ப பயணக் கட்டுப்பாடுகள் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri