கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி! சஜித்துக்கு எளிதான காரியம் அல்ல
பிரதமர் தெரிவு மேற்கொள்ளப்பட்ட நேரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் செயற்பாடு குறித்து கட்சிக்குள் அதிருப்தி நிலவுகிறது.
ஊடக செய்திகளின்படி, கட்சியின் பல உறுப்பினர்கள் சஜித்தின் தலைமைத்துவம் தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் சஜித் பிரேமதாச, இதுவரை பகுதிநேர தலைவராகவே இருந்துள்ளார் என்று குறிப்பிட்டதாக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
முதலில், கோட்டாபய ஜனாதிபதி பதவியில் இருந்து விலகினால் மாத்திரமே, தாம் பிரதமராக பதவியேற்கப்போவதாக சஜித் தெரிவித்திருந்தார்.
பின்னர் குறிப்பிட்ட காலத்துக்குள் அவர் பதவி விலகவேண்டும் என்று அவர் கோட்டாபயவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
எனினும் இந்த காலதாமதத்துக்கு மத்தியில் கோட்டாபய ஜனாதிபதி, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக தெரிவுசெய்துவிட்டார்.
இந்தநிலையில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சஜித்தினால், எளிதில் தவிர்க்கமுடியாது என்று கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

திருமணமான 4வது நாளில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட புதுப்பெண்! மற்றொரு அதிர்ச்சி சம்பவம் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri
