“பொய்களை பேசுவது மதகுருவிற்கு அழகில்லை“ அருட்தந்தையை எச்சரித்த தேரர்
பேசுவதற்கு இடம் கிடைத்ததென்று வாயில் வந்த பொய்களையெல்லாம் பேசுவது ஒரு சரியான மதகுருவிற்கு அழகில்லை என அருட்தந்தை சிறில் காமினிக்கு மாகல்கந்த சுதந்த தேரர் எச்சரித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்றைய தினம் கொழும்பு நீதிமன்ற வளாகத்தில் கத்தோலிக்க அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், மகாசங்கதினர் எனக் கூறிய 2 தேரர்கள் எனப் பல பேர் ஆர்ப்பாட்டமொன்றைச் செய்தார்கள்.
அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்த சர்ச்சையான கருத்து குறித்து அவரை கைது செய்வதைத் தடுப்பதற்காக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்த கருத்து உண்மையென்றால் வீணாக அவர் ஒழிந்து திரிய தேவையில்லை. குற்றத் தடுப்பு புலனாய்வு பிரிவிற்கு வந்து அந்த விடயம் குறித்து வாக்குமூலத்தை வழங்கக்கூடிய நிலையில் இருக்கவேண்டும்.
பேசுவதற்கு இடம் கிடைத்ததென்று வாயில் வந்த பொய்களையெல்லாம் பேசுவது ஒரு சரியான மதகுருவிற்கு அழகில்லை என அருட்தந்தை சிறில் காமினிக்கு நாம் நினைவுபடுத்திக் கொள்கின்றேன்.
புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் சுரேஷ் சலேவை இலக்கு வைத்து மற்றும் தேசியப் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலான விடயங்களைக் கூறியதால் இன்று அவற்றை நிரூபிக்க முடியாமல் உள்ளார். கத்தோலிக்க மக்களையும் , மதகுருமார்களையும் அச்சமூட்டுவதற்காக இவர்கள் இப்படி செய்கின்றார்கள்.
அருட்தந்தை சிறில் காமினி கைது செய்யப்படமாட்டார் எனக் குற்றப் புலனாய்வு பிரிவினர் தெளிவாக அறிவித்தனர். இருந்தும் இவர் இன்னும் தன்னை கைது செய்ய முயற்சிகள் இருப்பதாகத் தெரிவித்து வதந்திகளைப் பரப்பி வருகின்றார். நீங்கள் ஊடகத்துக்கு ஒரு விடயத்தைக் கூறுவதாயின் அதற்கான சாட்சிகள் உங்களிடம் இருக்கவேண்டும்.
அதைவிடுத்து தம்முடையவர்களுக்காக மாத்திரம் பொய்களைக் கூறுவது மிகவும் தவறான விடயம். கடந்த நல்லாட்சியில் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடனும், அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடனும் புலனாய்வு பிரிவினருக்கு எதிராகப் பல சம்பவங்கள் இடம்பெற்றது. கைதுகள் இடம்பெற்றது.
இதனால் முழு புலனாய்வுத் துறையும் உடைந்தது. இன்றும்
அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்டவர்கள் எதிர்க்கட்சியினரின் தேவைகளை
நிறைவேற்றி, அவர்களுடைய ஆலோசனைகளுக்கு அமையவே இவர்கள் இவ்வாறு
செய்கின்றார்கள் என தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 19 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
