தேசிய அடையாளங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதே அவசியம்: நஸீர் அஹமட்
தனித்துவ அடையாளங்களுடன் ஒதுங்கி இருப்பதை விட தேசிய அடையாளங்களுடன் ஒன்றிணைந்து வாழ்வதே இந்நாட்டின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பானது என வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
குருநாகல் முஸ்லிம் வர்த்தக அமைப்பின் ஏற்பாட்டில் குருநாகல் நகரிலுள்ள வர்த்தக பிரமுகர்களுடனான சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்று நேற்று முன்தினம்(12.06.2024) முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் தலைவர் எம். வை. எம். கியாஸ் தலைமையில் நடைபெற்றிருந்தது.
இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
தேசியத் தலைவர்கள்
அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கை முஸ்லிம்களின் தேசியத் தலைவர்களாக மதிக்கப்படும் டீ.பி.ஜாயா, சேர் ராசிக் பரீத், பதியூதீன் மஹ்மூத், எம்.எச்.எம். அஸ்ரஃப் போன்றவர்கள் தேசிய அரசியலுடன் இணக்கப்பாட்டுடன் செயற்பட்டதன் காரணமாகவே இன்று நாம் அனுபவிக்கும் உரிமைகளைப் பெற்றுத் தந்தார்கள்.
அந்த வகையில் தனித்துவ அரசியலை விட தேசிய அடையாளங்களுடனான அரசியலே எமக்குப் பாதுகாப்பானது பலன் தரக்கூடியது என குறிப்பிட்டுள்ளார்.
அந்நிகழ்வில் தொழிலதிபர் நவாஸ் ஹாஜியார் குருநாகல் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மொஹினுதீன் அஸார்தீன், வர்த்தகப் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








அடுத்த பேரழிவு தரும் நிலநடுக்கம் இந்த நாட்டைத் தாக்கக்கூடும்... எச்சரிக்கும் விஞ்ஞானிகள் News Lankasri
