எரிவாயு வியாபாரத்துடன் தொடர்பு! மஹிந்தவின் இளைய புதல்வர் வெளியிட்டுள்ள விடயம்
எரிவாயு வியாபாரத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது என பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரும், பிரதமரின் பிரதம அதிகாரியுமான யோசித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு சமையல் எரிவாயு வர்த்தகத்தில் ஒர் இடத்தை பிடிக்க தாம் முயற்சிப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமக்கு வரிவாயு நிறுவனங்கள் எதுவும் கிடையாது எனவும் நன்மதிப்பிற்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் நோக்கில் செய்திகள் திரிபுபடுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தங்களிடம் தங்க குதிரை இருந்ததாக கடந்த காலங்களில் கூறிய கட்டுக் கதைகளைப் போன்றே இந்த எரிவாயு குறித்த செய்தியிலும் உண்மையில்லை என யோசித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.