பாடசாலை மாணவிகள் மூவருக்கு நேர்ந்த துயரம் - பெற்றோர்களுக்கு எச்சரிக்கை
களுத்துறை, மொரகஹஹேன பிரதேசத்தில் 3 மாணவிகளை பாலியல் சீண்டல் செய்த மென்பொருள் பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிள்ளைகள் தொடர்பில் பெற்றோர் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒரே பாடசாலையில் கல்வி கற்கும் 3 மாணவிகளை தனது ஆடம்பர வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் சீண்டல் செய்ததாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட 13 வயதுடைய 2 சிறுமிகளும் 16 வயதுடைய ஒரு சிறுமியும் மருத்துவ பரிசோதனைக்காக ஹொரனை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொறியியலாளர் கைது
சிறுமிகளை வீட்டிற்கு அழைத்துச் செல்ல பயன்படுத்திய சொகுசு காரையும், அவர்களை அவ்வாறு செய்ய கவர்ந்திழுக்க அவர் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஒரு வருடத்திற்கு முன்பு, 16 வயது சிறுமி பாடசாலைக்கு நடந்து செல்லும் போது அவருக்கு உதவுவதாக கூறி சந்தேக நபர் தனது காரில் ஏற்றியுள்ளார்.
பொலிஸ் விசாரணை
மாணவியுடன் நட்புறவை ஏற்படுத்திய யாரும் இல்லாதபோது மூன்று முறை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த மாணவியுடன் மேலும் இரண்டு மாணவிகளை தனது இச்சைக்கு பயன்படுத்தும் நோக்கில் செயற்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
